VJS 51 movie shooting completed

விஜய் சேதுபதி 51 படப்பிடிப்பு ஓவர்: குரூப் போட்டோ இதோ!

சினிமா

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

அடுத்ததாக ‘குரங்கு பொம்மை’ படத்தை எடுத்த இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது 50 வது படமான ‘மகாராஜா’ படத்தில் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை 2’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது 51வது படத்தில் நடித்து வந்தார். விஜய் சேதுபதியின் 51வது படத்தை 7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ‘VJS 51’ படத்திற்கான படப்பிடிப்பு முழுக்க முழுக்க மலேசியாவில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர்கள் ருக்மணி, யோகி பாபு, பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

இந்நிலையில் VJS 51 படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து விட்டது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை முன்னிட்டு படக்குழுவின் குரூப் போட்டோ வெளியாகி உள்ளது.

VJS 51 படம் முடித்த பிறகு மீண்டும் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஹிந்தியில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

தி வில்லேஜ் – விமர்சனம்!

எக்சிட் போல் 2023 மத்திய பிரதேசம்: காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0