‘பட்டியல்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
‘பில்லா’, ‘ஆரம்பம்’ படங்களில் நடிகர் அஜித்தின் கெட்டப் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்ததுடன் இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கும் ரசிகரானார்கள் அஜித் ரசிகர்கள்.
இறுதியாக தமிழில் ‘யட்சன்’ படத்தை இயக்கியிருந்த விஷ்ணுவர்தன் இதனை தொடர்ந்து இந்தி சினிமாவுக்கு சென்றார்.
கார்கில் போரில் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘ஷெர்ஷா’ என்னும் படத்தை உருவாக்கி இருந்தார்.
விக்ரம் பத்ராவாக சித்தார்த் மல்ஹோத்ரவும், நாயகியாக கியாரா அத்வானியும் நடித்திருந்தனர்.
ஓடிடியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் 67’வது Wolf777news பிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் சிறந்த இயக்குநருக்கான விருதை ‘ஷெர்ஷா’ படத்திற்காக இயக்குநர் விஷ்ணுவர்தன் பெற்றுள்ளார்.
இந்தி சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே விருதை வென்ற விஷ்ணுவர்தனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
கோப்ரா பார்க்க ஆட்டோவில் வந்த விக்ரம்