தாமிரபரணி, பூஜை திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் – ஹரி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ரத்னம்.
இப்படத்தில் விஷாலுடன், ப்ரியா பவானி சங்கர், ராமச்சந்திர ராஜு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, முரளி சர்மா உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே ரத்னம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு ரத்னம் படத்தில் இடம்பெறும் “வாராய் ரத்னம்” என்ற பாடலின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
விவேகாவின் ஆக்ரோசமான வரிகளில், செண்பகராஜின் ஆவேசமான குரலில் உருவாகி உள்ள இப்பாடல் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புத்தாண்டில் குறைந்த சிலிண்டர் விலை : எவ்வளவு தெரியுமா?
படையெடுப்புக்குப் பின்னர் உக்ரைன் மீது மிக மோசமான தாக்குதல் தொடுத்த ரஷ்யா!