ஹரி – விஷால் படத்தின் புது அப்டேட் இதோ..!

நடிகர் விஷால் – இயக்குநர் ஹரி கூட்டணியில் தயாராகி வரும் 3 வது படம் “ரத்னம்”. இது விஷாலின் 34-வது படம் மற்றும் ஹரியின் 17-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க, நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஶ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் “Don’t worry da Machi” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரத்னம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழாவில் பேசிய ஹரி, “விஷாலுடன் இணைந்து ஒரு செமயான ஆக்சன் படம் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

சாமி, சிங்கம் படங்களில் இருந்த ஆக்சன் எனர்ஜி இந்த படத்திலும் இருக்க வேண்டும் என்று திரைக்கதை எழுதினோம்.

அது சூப்பராக வந்துள்ளது” என்று தெரிவித்தார். இதன் மூலமாக ரத்னம் படம் நிச்சயம் ஹரி ஸ்டைலில் ஒரு பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ரத்னம் படத்தின் புது அப்டேட் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வரும் மார்ச் 29ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/stonebenchers/status/1772592077798527236

இந்த அறிவிப்பை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஷாலும் நடிகை பிரியா பவானி சங்கரும் இடம் பெற்றுள்ளனர்.

இதன் காரணமாக செகண்ட் சிங்கள் நிச்சயம் ஒரு காதல் பாடலாக இருக்கும் என்று, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படம் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-கார்த்தி ராஜ்  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜிவி – ஐஸ்வர்யா குத்தாட்டம்..! டியர் புது பாடல் வெளியானது..!

ராம் சரண் பிறந்த நாள் ஸ்பெஷல்.. கேம் சேஞ்சர் அப்டேட்..!

இன்சூரன்ஸ் இல்லாத காரில் ஊர்வலம் வந்த வேட்பாளர்… அபராதம் விதித்த போலீசார்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts