சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கிறது. இதனால் ஏப்ரல் 26-ம் தேதி விஷால் சோலோவாக களமிறங்குகிறார்.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 26-ம் தேதி அரண்மனை 4, ரத்னம் படங்கள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஹாரர் மற்றும் அதிரடி ஆக்ஷன் என்ற வகையில் இரண்டு படங்களின் திரைக்கதைகளும் அமைந்துள்ளன. கோடை விடுமுறை என்பதால் இரு படங்களுமே ரசிகர்களால் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டன.
இந்தநிலையில் தற்போது அரண்மனை 4 படம் மே 3-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அன்றைய தினம் விஷாலின் ரத்னம் படம் மட்டுமே சோலோவாக வெளியாகிறது.
மோதல் வேண்டாம் என்ற எண்ணத்தில், அரண்மனை 4 படத்தின் வெளியீடு தள்ளிப்போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக விஷாலின் மார்க் ஆண்டனி ரிலீஸ் காரணமாக, ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த கவினின் ஸ்டார் படம் மே 1௦-ம் தேதி வெளியாகிறது. இதனை படக்குழுவினர் இன்று (ஏப்ரல் 18) அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
ஒவ்வொரு வார இடைவெளியில் ரத்னம், அரண்மனை 4, ஸ்டார் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதனால் மலையாளப் படங்களின் ஆதிக்கத்தால் நிறைந்திருந்த தமிழக திரையரங்குகளில் மீண்டும் தமிழ் படங்கள் வெளியாக இருக்கின்றன.
இது சினிமா ஆர்வலர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈஷா தன்னார்வலர் மாயமான வழக்கு : காவல்துறை பதில்!
இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டெலிட் ஏன்?… யுவன் விளக்கம்!
Pushpa 2: ஆல் டைம் ரெக்கார்டு! ஓடிடி + ஹிந்தி உரிமை இத்தனை கோடியா?