vishal thank MIB india to take immediate action

சென்சார் போர்டு விவகாரம்: மோடிக்கு நன்றி தெரிவித்த விஷால்

சினிமா

சென்சார் போர்டு மீது புகார் அளித்ததற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் நடிகர் விஷால் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், “மார்க் ஆண்டனி’ படத்தை பார்க்கவே மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.3 லட்சம் கேட்டனர். படத்துக்கு சான்றிதழ் வழங்க தனியாக ரூ.3.5 லட்சம் கேட்டனர்.

மேனகா என்ற இடைத்தரகர் மூலம் மொத்தம் ரூ.6.5 லட்சம் தொகையை இரண்டு தவணையாக கொடுத்து மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட்டேன்.

இனி வரும் காலங்களில் எந்த தயாரிப்பாளருக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படக்கூடாது. பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து விஷாலின் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

தனது புகாருக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததற்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“மும்பை சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பான இந்த முக்கியமான விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன்.

ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.

தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத்ஷிண்டே மற்றும் இந்த முயற்சியை உடனடியாக செயல்படுத்துவதில் ஈடுபட்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வைத் தருகிறது. ஜெய் ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

என்றென்றும் அதிமுககாரன்: எஸ்.பி.வேலுமணி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *