இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாக உள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
தியேட்டர் ரிலீஸ் பட்டியல்
சாமானியன்
நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “சாமானியன்”. ஆக்ஷன் திரில்லர் கதைகளத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மே 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
டர்போ
காதல் தி கோர், கண்ணூர் ஸ்க்வாடு, பிரம்மயுகம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் மம்மூட்டி நடிப்பில் விகாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “டர்போ”. இந்த படத்தில் மம்மூட்டிக்கு வில்லனாக பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி ஷெட்டி நடித்திருக்கிறார். ஒரு பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள டர்போ திரைப்படம் இன்று (மே 23) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
Furiosa: Mad Max Saga
Mad Max சீரிஸ் படங்களில் அடுத்ததாக “Furiosa: Mad Max Saga” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
PT சார்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் “PT சார்”. வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் நாளை (மே 24) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பகலறியான்
8 தோட்டாக்கள், ஜீவி போன்ற படங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் வெற்றி. தற்போது இவரது நடிப்பில் “பகலறியான்” திரைப்படம் நாளை (மே 24) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கொஞ்சம் பேசினால் என்ன
முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தை தயாரித்த சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கொஞ்சம் பேசினால் என்ன”. ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகி உள்ள இந்த படத்தை கிரி மார்பி இயக்கியுள்ளார். மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.
மேலும் “தலைவன்” என்ற மலையாள படம், “The Judgement” என்ற கன்னட படம், “பையா ஜி” என்ற ஹிந்தி படம் ஆகியவை மே 24 ஆம் தேதியும், “லவ் மீ” என்ற தெலுங்கு படம் மே 25 ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஓடிடி ரிலீஸ் பட்டியல்
ரத்னம்
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஏப்ரல் மாதம் வெளியான “ரத்னம்” திரைப்படம் இன்று (மே 23) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
ஜெய் கணேஷ்
நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற “ஜெய் கணேஷ்” என்ற மலையாள திரைப்படம் தற்போது மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (மே 24) வெளியாகிறது.
பிரசன்னா வதனம்
இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் சுஹஸ் நடிப்பில் வெளியான “பிரசன்னா வதனம்” திரைப்படம் அஹா ஓடிடி தளத்தில் மே 24 ஆம் தேதி வெளியாகும்.
ஆரம்பம்
மேலும் “ஆரம்பம்” என்ற தெலுங்கு படமும் மே 24 ஆம் தேதி ETv Win ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கல்கி 2898 AD: பிரபாஸுடன் இணைந்து கலக்கும் புஜ்ஜி ரோபோட்!
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை!
Lal Salaam Padam Yappo Varum