விஜய்க்கு வில்லனாகும் விஷால்: லோகேஷ் கனகராஜ் உறுதி !

சினிமா

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படம் உருவாக இருக்கிறது.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

ஒட்டுமொத்த திரையுலகும் எதிர்பார்த்து இருக்கும் இப்படத்தில் ஏற்கனவே சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. அதன்படி சஞ்சய் தத், பிரித்விராஜ், நிவின் பாலி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிப்பட்டன.

மேலும் தற்போது நடிகர் விஷாலை இப்படத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

tamil cinema news new update thalapathy 67

இந்நிலையில், நடிகர் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஷாலின் மேனேஜருடன் பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் தற்போது விஜய் உடன் இணைந்து விஷால் நடிப்பது உறுதிதான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கே.எல்.ராகுலுக்கு பதில் ரிஷப்புக்கு வாய்ப்பு கொடுக்கலாம்: ஹர்பஜன் சிங்

சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.