vishal hits back

எனக்கா ரெட் கார்டு… விஷால் காட்டம்!

சினிமா

தனக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் போடப்பட்டுள்ள தீர்மானங்களை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். vishal hits back

நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த போது, சங்கத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என தயாரிப்பாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியது. இதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் செயற்குழுவின் பரிந்துரைப்படி அவருக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, இனி வரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், அதில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஆலோசித்தப் பின்னரே படப்பிடிப்பைத் தொடங்க வேண்டும் என அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் விஷால், அறிக்கை ஒன்றை இன்று (ஆகஸ்ட் 10) வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பார்கள் சங்கத்தின் பத்திரிக்கை செய்தியில் காணும் ஸ்பெசல் ஆடிட்டரின் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுநாள் வரை சங்கம் சார்பாக என்னிடம் முறையாக எவ்வித விளக்கமும் கேட்கப்படாத நிலையில், தங்களின் இப்படி ஒரு பொய்யான பத்திரிக்கை செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன்.

நான் கடந்த 2017-2019 ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக அறுதிப் பெரும்பான்மையான உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிப் பெற்றேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சங்க உறுப்பினர்களின் நலனை கருத்தில்கொண்டு, சங்க சட்டவிதிகளின் அடிப்படையில், சங்க பொறுப்பாளர்கள் அதில் செயலாளராக இருந்த கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் தீர்மானங்களின்படி, ஆயுட்கால காப்பீடு திட்டம், ஓய்வூதியத் திட்டம், கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, திருமண உதவித் தொகை மற்றும் தீபாவளி பரிசு ஆகிய பல்வேறு சிறப்பான உதவித் திட்டங்களை நிர்வாக உறுப்பினர்களின் ஆலோசனைப்படியும் செயற்குழு ஒப்புதல் பெற்ற தீர்மானத்தின்படியும் நாங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்தியுள்ளோம்.

எந்தவித தவறும் செய்யாதபட்சத்தில் தாங்கள் என் மீது தீர்மானம் நிறைவேற்றியதாக பத்திரிகை செய்தி ஏற்புடையதல்ல என்பதை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேற்காணும் நலத்திட்ட உதவிகள் முழுமையாக உறுப்பினர்களே பயனடைவதற்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் முறைகேடு உள்ளதாக சந்தேகம் இருக்கும் பட்சத்தில், அது தொடர்பாக விளக்கவும், தெளிவுபடுத்தவும் கடந்த கால நிர்வாகத்திற்கு முறையான சந்தர்ப்பம் அளிக்காமல், தாங்கள் நேரடி முடிவெடுத்து ஆதாரமற்ற பழி சுமத்துவது, காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே அறியப்படுகிறது.

எனது தலைமையிலான சங்க நிர்வாகம் செயல்படுத்திய திட்டத்தின் வாயிலாக தற்போதைய நிர்வாகத்தினர் உட்பட அனைத்து சங்க உறுப்பினர்களும் அச்செயல் திட்டத்தின் மூலம் நற்பலன் பெற்றதும் தாங்கள் அறிந்ததே.

சங்க வளர்ச்சிக்காகவும் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனுக்காகவும் கொடுக்கப்பட்ட தொகையை முறைகேடானது என்ற குற்றச்சாட்டினை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்.அதற்க்கான ஆவணங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் உள்ளது.

சங்கத்தின் வளர்ச்சியே கருத்தில் கொண்டு சங்கத்திற்கு வருவாய் ஈட்டுவதற்காக சங்க பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஒப்புதல் அளித்து “இளையராஜா 75” என்ற மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தி சங்கத்திற்கு பாராட்டுதலும் பெற்று இருக்கிறோம்.

 

 

 

 

 

 

 

 

 

கடந்த 2017-2019 ஆண்டுகளுக்கான ஆவண சான்றுகள் அனைத்தும் சங்க நிர்வாகம் வசம் உள்ள நிலையில், என் தரப்பு சாட்சிகளை கொண்டு ஒரு நியாயமான விசாரணை நடந்தால், என் மீது பத்திரிகை மூலமாக தாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்பது நிரூபணமாகும்.

உண்மையில் காழ்ப்புணர்ச்சியும், சுய உள் நோக்கங்களும் இன்றி, சங்க நலனே தங்கள் நோக்கமெனில் நியாயமான என்கருத்து ஏற்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.

இத்துடன் என் மனதில் இருக்கும் கேள்விகளையும் முன்வைத்து விடுகிறேன்.

என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிநுட்பகலைஞர்கள் ஏன் தயாரிப்பாளர் சங்கத்தில் கலந்தாலோசிக்க வேண்டும்?

இவை விஷால் என்ற நடிகருக்கு தயாரிப்பாளர் சங்கம் விதிக்கும் மறைமுக ‘ரெட் கார்ட்” -ஆ?

கடந்த காலங்களில் நடிகர்கள் மீது ரெட் கார்ட் நேரடியாகவோ மறைமுகமாகவோ விதத்தில் சட்டத்தின் முன் கை கட்டி நின்று தங்கள் முடிவை அன்றைய சங்க நிர்வாகிகள் வாபஸ் பெற்ற வரலாறு உள்ளது என்பதை மறவாமல் இருப்பது நல்லது.

என் மீது தனிப்பட்ட ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் இக்கடிதம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் தாங்கள் வன்மத்தினால் அனுப்பிய பத்திரிகை செய்தியை திரும்ப பெற்று பதில் அளிக்க வேண்டும். இல்லை எனில் சட்ட ரீதியாக நான் எதிர் கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று விஷால் குறிப்பிட்டிருந்தார்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் நிகழ்த்திய அதிசயம்! அந்த பெண் இப்போ ஹேப்பி!

வினோத் போகத்துக்கு வெள்ளி கிடைக்குமா? : இன்று இரவு தீர்ப்பு!

தொடரும் துயரம் : தருமபுரி மாணவிக்கு காஷ்மீரில் நீட் தேர்வு மையம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *