Vishal film junior artist met accident

விபத்தில் சிக்கிய விஷால் படக்குழுவினர்!

சினிமா

நடிகர் விஷால் நடித்து வரும் புதிய பட படப்பிடிப்புக்காகச் சென்று கொண்டிருந்த படக்குழுவினர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடித்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களாகும்.

தற்போது மூன்றாவது முறையாக ஹரி – விஷால் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்துக்கு ரத்னம் என்று பெயரிட்டுள்ளனர்.

விஷாலின் 34ஆவது படமான ரத்னம், 2024 கோடையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேளம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜீனியர் ஆர்டிஸ்ட்கள் இன்று (டிசம்பர் 14) கேளம்பாக்கம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது இவர்களது வாகனம் விபத்தில் சிக்கியது.

இதில் காயமடைந்த சுமார் 15 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

திமுகவிடம் எம்.பி.சீட் கேட்கும் தவாக… அழைக்கும் அதிமுக : வேல்முருகன் பேட்டி!

நாடாளுமன்ற தாக்குதல்: நான்கு பேருக்கு போலீஸ் காவல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *