வழக்கு விசாரணையின் போது, தன்னை ‘பாஸ்’ என்ற விஷாலை நீதிபதி கண்டித்துள்ளார்.
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரிக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21.29 கோடி கடன் வாங்கியிருந்தார். vishal calls judge boss
இந்த கடனை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டு, அதற்குப் பின் விஷால் பிலிம் பேக்டரி வெளியிடும் படங்களின் உரிமையை தங்களுக்குத் தர வேண்டும் என்று விஷாலிடம் ஒப்பந்தம் போட்டிருந்தது.
ஆனால் இதை மீறி, விஷால் பிலிம் பேக்டரி, “வீரமே வாகை சூடும்” படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாகக் கூறி லைக்கா நிறுவனம் விஷாலின் நிறுவனத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.
இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நேற்று ஆஜரான நடிகர் விஷால் “வெற்று பேப்பரில் தான் கையெழுத்திட்டதாகவும், இந்த ஒப்பந்தம் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது” என்றும் கூறினார்.
இந்த பதிலைக் கேட்டுக் கோபமடைந்த நீதிபதி பி.டி.ஆஷா, “நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? மிகவும் புத்திசாலித்தனமாகப் பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா?” என்று விஷாலிடம் கேட்டார்.
மேலும் “சண்டைக்கோழி 2” வெளியிடும் முன்பாக கடனை அடைத்துவிடுவதாக சொன்ன நீங்கள், ஏன் அடைக்கவில்லை? என்று கேட்டார்.
இதற்கு பதிலளிக்கும் போது, விஷால் நீதிபதியை ‘பாஸ்’ என்று அழைத்தார். இதைக் கேட்டவுடன், குறுக்கிட்ட நீதிபதி பி.டி.ஆஷா, ”பாஸ் போன்ற வார்த்தைலாம் இங்குப் பயன்படுத்தக்கூடாது. கேட்கிற கேள்விகளுக்கு, ஆம் அல்லது இல்லை என்று பதில் அளிக்க வேண்டும் என்று கண்டித்தார்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை இன்று (ஆகஸ்ட் 2) தள்ளிவைத்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”அமலாக்கத்துறைக்காக காத்திருக்கிறேன்” : ராகுல் காந்தி
பட்ஜெட்… மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ்நாட்டைப் பின்பற்றும் புதுச்சேரி
ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… ரேட் எவ்வளவு தெரியுமா?