நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. தற்போது மீண்டும் இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணி விஷால் 34 படத்திற்காக 3 வது முறையாக இணைந்துள்ளனர்.
விஷால் 34 படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க, நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஶ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்றது.
இந்நிலையில் விஷால் 34 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் ஷாட் டீசர் இன்று (டிசம்பர் 01) வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் டீசரில் விஷால் ஆக்ரோஷமாக எதிரியின் தலை வெட்டி கையில் எடுத்து செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ” ரத்னம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹரி ஸ்டைலில் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் மாஸ் ஆக்சன் பொழுதுபோக்கு படமாக தான் இந்த படமும் உருவாக உள்ளது டீசரிலேயே தெறிக்கிறது. 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ரத்னம் படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகிறது Redmi 13C!
ஸ்டூடியோ கிரீன் பேரே இல்ல?… வைரலாகும் பருத்திவீரன் சென்சார் சர்டிபிகேட்!