தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. யானை படத்திற்கு பின் இயக்குனர் ஹரி நடிகர் விஷாலின் 34வது படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே விஷால் – ஹரி கம்போவில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து 3வது முறையாக ஹரி-விஷால் கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஷால் 34 படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க, நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஷால் 34 படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் டைட்டில் வரும் டிசம்பர் 01 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
விஷால் 34 படத்திற்கு “பரிசு” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
வீட்டுக்குள் புகுந்து மூன்று வயது குழந்தையை கடித்து குதறிய 3 தெரு நாய்கள்!
பள்ளிக்கால வாழ்க்கையை கிளறிவிடும் ‘சபாநாயகன்’: அசோக் செல்வன்