நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான செலவுக்காக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை விருமன் படக்குழுவினர் வழங்கினர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று(14.08.2022) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ், மற்றும் செயற்குழு உறுப்பினர்களான ராஜேஷ், சச்சு, மனோபாலா, பசுபதி, லதா சேதுபதி, விக்னேஷ், சோனியா, நந்தா, சரவணன், பிரேம்குமார்.எஸ், ஸ்ரீனிவாசா ரெட்டி(எ)ஸ்ரீமன், எம்.ஏ.பிரகாஷ், வாசுதேவன்.வி.கே ஹேமச்சந்திரன். ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து நடிகர் சங்கத்தின் அறங்காவலர் குழு கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதன் உறுப்பினர்களான நாசர், கார்த்தி, மற்றும் குழு உறுப்பினர்கள் பூச்சி எஸ்.முருகன், லதா, சச்சு(எ)சரஸ்வதி, ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்
இதன் பிறகு, தமிழ் சினிமாவில் இருந்து 2020-ம் ஆண்டிற்கான தேசிய விருதுக்கு தேர்வான கலைஞர்கள் அனைவரும் பாராட்டப்பட்டார்கள்.
சிறந்த நடிகர் – சூர்யா (சூரரைப் போற்று)
சிறந்த திரைப்படம் – சூரரைப் போற்று -தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,
சிறந்த திரைக்கதை ஆசிரியர் – சுதா கொங்கரா (சூரரைப் போற்று),
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று),
சிறந்த பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் (சூரரைப் போற்று),
சிறந்த தமிழ் திரைப்படம் : சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (இயக்குநர் சாய் வஸந்த்),
சிறந்த படத்தொகுப்பாளர்: ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்),
சிறந்த துணை நடிகை : லட்சுமி ப்ரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்),
சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனகர்த்தா: மடோன் அஸ்வின் (மண்டேலா),
சிறந்த ஆவணப்படம் இயக்குநர்: திரு.ஆர்.வி. ரமணி( பானு ) ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் ‘விருமன்’ படத்தின் நாயகனான நடிகர் கார்த்தி, ‘விருமன்’ பட தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, இணை தயாரிப்பாளர் 2டி ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான செலவுக்காக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
விருமன் படம் பார்த்த விஜய் மனைவி!