’சில்லா சில்லா’ பாடலுக்கு நடனமாடிய சிறுமி: வைரல் வீடியோ!

சினிமா

அஜித் குமார் நடிப்பில், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு.

இந்த படம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற வங்கிக்கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி ’சில்லா சில்லா’ பாடல் வெளியானது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதை அஜித் ரசிகர்கர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் சிறுமி ஒருவர் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோகாட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் பாடல் உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. தற்போது வரை 13 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அன்று பால் வியாபாரி இன்று முதல்வர் : யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு?

வாய்ப்பு வழங்காத இந்தியா:அயர்லாந்து அணிக்கு போகிறாரா சஞ்சு சாம்சன்?

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.