விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் மக்களின் ஆதரவுடன் இன்று வரை டாப் 10 தமிழ் சீரியல்களில் ஒன்றாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலின் முதன்மை கதாபாத்திரமான பாக்கியா தனது கணவன் கோபியால் பல ஏமாற்றங்களை சந்தித்து தனியாக தனது சொந்த காலில் நிற்பது போல சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
பல சுவாரசியமான எபிசோட்களால் மக்களின் கவனத்தை ஈர்த்த பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா, எழில், செழியன், ஜெனி என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர், சீரியலை விட்டு விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் இளைய மகன் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் VJ விஷால். இவர் திடீரென பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலகி விட்டார்.
தற்போது நடிகர் VJ விஷாலுக்கு பதிலாக நடிகர் நவீன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். எந்த முன்னறிவிப்பும் இன்றி பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விஷால் ஏன் விலகினார் என்று எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் நடிகர் VJ விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷன் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
அந்த வீடியோவின் கேப்ஷனில் அவர் பதிவிட்டு இருந்தது என்னவென்றால் “சரியான முடிவுகளை எடுக்கிறேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.. நான் முடிவுகளை எடுக்கிறேன் பிறகுதான் அவற்றை சரி செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
VJ விஷாலுக்கு பட வாய்ப்பு கிடைத்து விட்டது, அதனால் தான் சீரியலில் நடிப்பதை அவர் நிறுத்திக் கொண்டார் என்று சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் உண்மையான காரணம் என்னவென்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கூலி : பாலிவுட் நடிகர் தேடலில் லோகேஷ் கனகராஜ்
உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம்!