காஷ்மீரில் நடந்து வரும் லியோ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழுவினருடனான புகைப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் நடிப்பில் அடுத்ததாக ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் முன்பு நடித்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், லியோ படத்தையும் இயக்குகிறார்.
இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், மிகப் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யாவும் விக்ரம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
விக்ரம் படத்தை தொடர்ந்து, தற்போது லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், காஷ்மீரில் நடந்து வரும் லியோ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று (பிப்ரவரி 10 ) பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்