ரசிகர் கொலை… நடிகர் தர்ஷன் சிறையில் ஜாலியோ ஜிம்கானா! – 7 பேர் சஸ்பெண்ட்!

சினிமா

சில மாதங்களுக்கு முன்பு, கன்னட நடிகை பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தர்ஷனுடன் இருக்கும் படத்தைப் பதிவிட்டு, இருவரும் 10 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இருவருமே ஏற்கனவே திருமணமானவர்கள். இதற்காக, தர்ஷனின் மனைவி விஜயலட்சுமியும் பவித்ராவை கண்டித்திருந்தார்.

இது கன்னட சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் பவித்ராவுக்கு இன்ஸ்டாகிராமில் தர்ஷனும், விஜயலட்சுமியும் சேர்ந்து வாழும்படி அவரை விட்டு விலகும்படி மெசேஜ் செய்துள்ளார். மேலும், பவித்தராவுக்கு அவர் ஆபாசமாக மெசேஜ் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பவித்ரா தர்ஷனிடம் கூற, தர்ஷனோ ரேணுகா சுவாமி உறுப்பினராக இருக்கும் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் தலைவரைத் தொடர்புகொண்டு அவரை அழைத்து வரும்படி  கூறியிருக்கிறார். அதன்படி, தர்ஷனின் நண்பர் வினய் குமார் வீட்டுக்கு அழைத்துவர, ரேணுகா சுவாமி கடுமையாகத் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

தர்ஷனின் உத்தரவின்பேரில் ரேணுகா சுவாமியை செய்ததாக போலீஸில் சரணடைந்த மூன்று பேர் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, போலீஸார் தற்போது தர்ஷன், பவித்ரா கைது செய்யப்பட்டனர். தற்போது, தர்ஷன் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தர்ஷன் சிறையில் ராஜ வாழ்க்கை வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக 25 செகண்ட் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் , தர்ஷன் சிறையில் புல்வெளி பகுதியில் சேரில் அமர்ந்து கொண்டு ஜாலியாக பேசி சிரித்து கொண்டிருக்கிறார். ஒரு கையில் கப்பில் டீ குடித்து கொண்டிருக்கிறார். மற்றொரு கையில் சிகரெட் உள்ளது. இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஒலிம்பியன் ஸ்ரீஜேஷை அவமானப்படுத்திய கேரள அரசு… இரு முறை பாராட்டு விழாவை ரத்து செய்து அதிர்ச்சி!

திருமண மேடையில் ஏற்பட்ட காய்ச்சல்… புதுப்பெண் பலியான சோகம் – கேரளாவில் அதிர்ச்சி!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *