பசங்க, களவாணி, வாகை சூடவா, தேசிங்கு ராஜா போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல்.
தற்போது நடிகர் விமல் நடிப்பில் இயக்குனர் மைக்கல் கே ராஜா இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் “போகுமிடம் வெகு தூரமில்லை”.
இந்த படத்தில் விமலுடன் இணைந்து கருணாஸ், தீபா ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சுந்தர பாண்டியன், நீர்ப்பறவை, மதயானை கூட்டம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த என்.ஆர். ரகுநந்தன் “போகுமிடம் வெகு தூரமில்லை” திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் மே 24ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தில் நடிகர் விமல் அமரர் ஊர்தி ஓட்டுநர் கதாபாத்திரத்திலும், நடிகர் கருணாஸ் தெருக்கூத்து கலைஞர் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
“இந்த உலகத்துல உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் ஏதோ ஒரு தேவை இருந்துகிட்டே தான் இருக்கும். அந்த மாதிரியான தேவைகள் சில நேரத்துல நெருக்கடியை உருவாக்கும் போது” என்ற வசனத்துடன் தொடங்கும் டிரைலரில்,
ஒரு பெரிய குடும்பத்தின் மூத்த நபர் மரணம் அடைந்த பின் அந்த குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், விமலின் வாழ்க்கையில் உருவாகும் சிக்கல்கள், விமலுடன் அமரர் ஊர்தியில் பயணிக்கும் கருணாஸ் என பல சுவாரசியமான காட்சிகளும் வசனங்களும் டிரைலர் முழுவதும் இடம்பெற்று இருக்கிறது.
கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் வெற்றி படத்தை கொடுக்க தடுமாறிக் கொண்டிருக்கும் நடிகர் விமலுக்கு “போகுமிடம் வெகு தூரமில்லை” திரைப்படம் நிச்சயம் வெற்றியை தேடி தரும் என்று நம்புவோம்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாழ்க்கையில் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி கையாள்வது?
டாப் 10 செய்திகள் : 6ஆம் கட்ட தேர்தல் முதல் ரிமெல் புயல் வரை!
மேதகு ஆளுனருக்கோர் மித்திரக் கடிதம் !
கிச்சன் கீர்த்தனா: கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரம்!