ஆதித்தகரிகாலன் அழைப்புக்கு அருண்மொழி வர்மன் அளித்த அட்டகாசமான பதில்!

சினிமா

ஆதித்தகரிகாலன் விடுத்த அழைப்புக்கு வந்தியத்தேவன் மறுப்பு தெரிவித்த நிலையில், அருண்மொழி வர்மன் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கும் கல்கியின் வரலாற்று நாவலைத் தழுவி உருவாகும் ’பொன்னியின் செல்வன்‘ படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்தகரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வரும் நிலையில் இதில் ஆதித்தகரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் பதிவிட்ட ட்விட் ஒன்றே, அப்படத்தைப் பிரபலப்படுத்தி வருகிறது. ஆம், அவர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 13) ட்விட்டரில், “தஞ்சைக்குச் செல்கிறேன்.

குந்தவை (த்ரிஷா) உடன் வருகிறாயா?” எனக் கேட்டிருந்ததுடன், “வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய்தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என பதிவிட்டிருந்தார். அத்துடன், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை த்ரிஷா ஆகியோரையும் டேக் செய்திருந்தார்.

இதற்கு வந்தியத்தேவனான நடிகர் கார்த்திக் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. எனக்கு காய்ச்சலாக இருப்பதால் வீட்டில் இருந்தே வேலை செய்கிறேன். வீடியோ காலில் இளவரசியிடம் பேசி சாரி சொல்லி விடுகிறேன். ப்ளீஸ் எக்ஸ்கியூஸ் மி” என ஆதித்தகரிகாலனின் அழைப்புக்கு மறுப்பு தெரிவித்ததுடன், சுவாரஸ்யமாகவும் பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 14) அருண்மொழி வர்மனும் (ஜெயம் ரவி) பதிலளித்துள்ளார். அவரும், ட்விட்டர் பக்கத்தில் ‘அருண்மொழி வர்மன்’ எனப் பெயரை மாற்றியுள்ளார். ஏற்கெனவே நடிகர் விக்ரம் ஆதித்தகரிகாலன் என்றும், நடிகை திரிஷா குந்தவை என்றும் பெயரை மாற்றியிருந்தனர்.

அருண்மொழி வர்மன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “தம்பிவுடையான் படைக்கு அஞ்சான் இதோ நானும் வந்தியதேவனுடன் வந்துவிடுகிறேன் என் அண்ணனை வீழ்த்தவும் வெல்லவும் யாராலும் இயலாது” எனப் பதிவிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க மறுபுறம், வந்தியத்தேவன் அளித்த மறுப்புக்கும் ஆதித்தகரிகாலன் இன்று பதிலளித்துள்ளார். அவர் வந்தியத்தேவனுக்கு அளித்துள்ள ட்விட்டர் பதிவில், “சரிதான்.‌ இளைப்பாறு நண்பா. சில போர்களை தனியாக சென்றுதான் வெல்ல வேண்டும். தஞ்சை சென்று நம் அன்பு படைகளை சந்தித்தே ஆகவேண்டும். சீ யூ ஆன் தி அதர் சைட் வந்தியத்தேவா” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆதித்தகரிகாலன் அளித்த ட்விட்டுக்கு வந்தியத்தேவன் மறுப்பு தெரிவித்தாலும், அதற்கும் ஆதித்த கரிகாலன் பதிலளித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெ.பிரகாஷ்

பொன்னியின் செல்வன்: உலகமெல்லாம் முடிந்த வெளியீட்டு ஒப்பந்தம்- தமிழ்நாட்டில் யாருக்கு?

+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *