சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்கும் விக்ரம்?.. மரண மாஸ் அறிவிப்பு!

சினிமா

நடிகர் விக்ரம் என்று சொன்னாலே அவரது கடின உழைப்புதான் கண் முன்னால் வரும். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது முழு உழைப்பையும் உறுதியாக அளிப்பவர். அவரைப் பொறுத்தவரை தேர்வு செய்யும் கதையில் சற்று கவனம் தேவை என்பது தான் பலரது ஆலோசனையாக உள்ளது.

தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. அவரின் அடுத்த படத்தை ‘சித்தா’ இயக்குனர் அருண்குமார் இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் விக்ரம் தனது புதிய படத்திற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் இதுகுறித்து, “மிக்க நன்றி என்மேல் அன்பும் ஆதரவும் பொழிந்ததற்கு. முக்கியமான அப்டேட் ஒன்று இன்னும் சில தினங்களில்.

மறக்காமல் ஓ போடு”, என்று கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இது நிச்சயம் 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஜெமினி’ திரைப்படத்தின், இரண்டாம் பாகம் தான் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம் ஜெமினி படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதைத் தான், விக்ரம் இதுபோல தெரிவித்து இருக்கிறார் என்று கூறுகின்றனர். 2- வது பாகமா? அல்லது ரீ-ரிலீஸா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டான ‘ஜெமினி’ திரைப்படம் 2002 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தை ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தனர்.

கிரண், கலாபவன் மணி, வினு சக்கரவர்த்தி, மனோரமா போன்ற பலர் நடித்திருந்தனர். பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூல் மழை பொழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“தமிழ்நாட்டின் கோரிக்கையை பிச்சை என்கிறார்கள்” : நெல்லையில் ராகுல் பிரச்சாரம்!

Manjummel Boys: OTT ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்.. இதுதான் காரணமா?

பாஜகவில் வாரிசு அரசியல் : ஈஸ்வரப்பா சுயேட்சையாக போட்டி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *