விக்ரம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்: தங்கலான் ஆடியோ லாஞ்ச்… செகன்ட் சிங்கிள் அப்டேட்!

Published On:

| By Selvam

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம் தங்கலான். கோலார் தங்கச்சுரங்கத்தில் தமிழர்கள் சந்தித்த இன்னல்களை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது, பீரியட் ஃபிலிமாக தயாராகியுள்ள தங்கலான் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தங்கலான் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற ‘மினிக்கி மினிக்கி’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், தங்கலான் படத்தின் ஆடியோ லாஞ்ச் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது. இந்த மாதத்தில் அடுத்தடுத்து தங்கலான் படத்தின் அப்டேட்டுகள் வெளியாவதால், விக்ரம் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 3வது பதக்கத்தை வெல்வாரா மனு பாக்கர்?

சோதனை அடிப்படையில் ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் விநியோகிக்கும் திட்டம் தொடக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share