சினிமாவுக்காகவே வாழ்வேன் : கலங்க வைத்த விக்ரம்!

சினிமா

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் நலம்பெற்று வீடு திரும்பிய நடிகர் விக்ரம், ஒருநாள் ஓய்வுக்குப் பின் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்றார்.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார் விக்ரம். இவற்றில் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு (11.07.2022) சென்னை, வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் வளாகத்தின் திறந்தவெளியில் நடைபெற்றது.

இதில் விக்ரம், படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரமின் மகன் துருவ், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், கவிஞர் தாமரை, இயக்குநர் அஜய் ஞானமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‛கோப்ரா’ படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் விக்ரம் சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் ஒருநாள் சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவின. இது சம்பந்தமாக கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், “நெஞ்சில் கை வைத்துக் கொண்டு விழா மேடையில் ஏறிவிடக் கூடாது. இல்லையென்றால் கோப்ரா இசை வெளியீட்டு விழா மேடையில் விக்ரமுக்கு நெஞ்சுவலி என்று வந்துவிடும் என்று தனது பேச்சை தொடங்கினார்.

“எவ்வளவோ பார்த்துவிட்டோம். இதெல்லாம் ஒண்ணுமில்லை என்பதால் வதந்திகள் பற்றி கவலைப்படவில்லை. எனது குடும்பம், எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருக்கும் வரை எனக்கு எதுவும் ஆகாது. 20 வயது இருக்கும்போது எனக்கு விபத்து ஏற்பட்டது. உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்போது எனது காலை இழக்க வேண்டிய தருணம் வந்தது. ஆனால் அதில் இருந்தும் நான் மீண்டு வந்தேன். எனவே அதை பார்க்கும்போது இதெல்லாம் ஒன்றுமே கிடையாது.

சிறிய அசௌகரியத்தால் மருத்துவமனை செல்ல நேர்ந்தது. ஆனால், அதை இந்த அளவுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். இதனால் என்னை நேசிக்கும் சிலர் சங்கடங்களை சந்தித்தனர். அவர்கள் அனைவருக்காகவும், நான் நன்றாக இருக்கிறேன் என சொல்லவே இந்த மேடைக்கு வந்துள்ளேன். நான் எப்பவும் சினிமாவுக்காகவே வாழ்வேன். மற்றதை காட்டிலும் சினிமாவே எனது உயிர். பல ஆண்டுகளுக்கு முன் சோழா டீ விளம்பரத்தில் நடித்தேன்.

அன்று விளம்பர படத்துக்கு திலீப்குமார் என்பவர் இசையமைப்பாளராக இருந்தார். அன்று அந்த விளம்பரத்தில் சோழ ராஜனாக நடித்தேன். ஆனால், இன்று மிகப்பெரிய காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் எனது கனவு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஆதித்த கரிகால சோழனாக நடித்துவிட்டேன். இரண்டு ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நமக்கு என்று ஒரு கனவு ,லட்சியம் இருந்தால், அதற்கேற்ற உழைப்பைக் கொடுத்தால் நாம் நினைப்பதை விட பெரிய இடத்தை அடைய முடியும். உழைத்தால் உயரலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது. ரசிகர்களின் அன்பும் ஆதரவும் நிறைய இருக்கிறது. ரசிகர்களைப் பற்றி நினைக்கும் போது வார்த்தைகள் வருவதில்லை” என்றவர் உயிர் உருகுதே எனும் பாடலை பாடி பார்வையாளர்களைக் கண்கலங்க செய்து தனது உரையை நிறைவு செய்தார்.

– அம்பலவாணன்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *