பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள படம் தங்கலான். கோலார் தங்க வயல் குறித்த பின்னணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி தங்கலான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ( நவம்பர் 01 ஆம் தேதி) தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
மேலும் சென்னையில் நடைபெற்ற ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டு உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் விக்ரம், “வரலாற்றில் இருக்கும் நல்ல விஷயங்களை கொண்டாட வேண்டும். கெட்ட விஷயங்களை மறக்க கூடாது. அந்த கெட்ட விஷயங்கள் இனியும் நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். ரஞ்சித் மிக அழகாக கதைக்களத்தை விவரித்தார். சில விஷயங்களை நாம் மறந்துவிடுகிறோம். அப்படி நாம் மறந்த விஷயங்களை சித்தரித்திருக்கிறோம். அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சமூகத்தினரின் வாழ்வியலைப் பேசும் இப்படம் நம்மை அழவைத்து சோகத்தை பிழியாமல் நிகழ்வுகளை யதார்த்தமாக எடுத்து சொல்லும் படைப்பாக இருக்கும்.
கே.ஜி.எப்பில் தங்கி இருந்து படப்பிடிப்பை நடத்தினோம். காலையில் அவ்வளவு வெப்பமாக இருக்கும், இரவில் குளிர் அதிகமாக இருக்கும். வெறும் கோவணத்தை கட்டிக்கொண்டு நடிக்க வேண்டியிருந்தது. ‘ஒரு தேள் கொண்டுவாடா’ என ரஞ்சித் சொன்ன 10 நிமிடத்தில் தேள் இருக்கும். பாம்பு கொண்டுவா என்றால் 5 நிமிடத்தில் பாம்பு இருக்கும். எங்கு பார்த்தாலும், பாம்பு, தேள்கள் உலாவிக் கொண்டிருக்கும் இடம் அது. அப்படி ஒரு இடத்தில் செருப்பு இல்லாமல், பார்த்து பார்த்து நடந்து சென்றோம். அப்போது தான் அந்த இடத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உணர்ந்தோம். என்னுடைய உடை தொடங்கி தோற்றம் எல்லாமே அவர்களின் வாழ்வியல் தான். மேக்கப்புக்கு மட்டும் 4-5 மணி நேரமாகும். படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற உடன் கோவணத்தை கட்டிக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம்.
முதன்முறையாக நான் லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன். இதனால் உச்சரிப்பு, அதற்கான குரல் வளம், அந்த காலத்தின் பேச்சு வழக்கு தொடங்கி எல்லாத்தையும் கவனித்து நடிக்க வேண்டும். சில சமயம் நடிக்கும் போது குரலில் மாற்றத்தை கொண்டு வரும்போது, அதற்கேற்ப முகபாவனை ஒத்துப்போகாது. இரண்டையும் கவனித்து நடிக்க வேண்டும். பெரும்பாலான ஷாட்கள் சிங்கிள் ஷாட்கள் தான். ஒரு சீன் 2 ஷாட்களில் முடியும். கேமரா சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு தடவை மிஸ்ஸானால் மீண்டும் தொடக்கத்திலிருந்து நடிக்க வேண்டும். ரஞ்சித்தும் எங்களுக்காக படப்பிடிப்பில் கோவணத்துடன் தான் இருந்தார்.
முந்தைய நாள் எப்போடா முடியும் என இருக்கும். அடுத்த நாள் ‘வாங்க ஷூட்டுக்கு போவோம்’ என ஆர்வத்துடன் இருப்பேன். இப்படியான உணர்வை நான் எந்தப் படத்திலும் சந்தித்தது இல்லை. நன்றி ரஞ்சித். அந்தக் கதாபாத்திரத்துடன் வாழ்ந்துவிட்டு,அந்த வாழ்வியலுடன் கார், விமானத்தில் செல்லும்போது ஏதோ வித்தியாசமான உணர்வாக இருந்தது. இந்தப் படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் ‘சார்பட்டா’வை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும்.
ரஞ்சித்துடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவம். தொடக்கத்தில் 2,3 நாட்கள் ஒருமாதிரி இருந்தது. பிறகு சிங்க் ஆகிவிட்டேன். அவரின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக இருக்கும். சிறப்பான இயக்குநர் ரஞ்சித். நீங்கள் கணிப்பதை தாண்டி இந்தப் படம் வேற மாதிரியான படமாக இருக்கும்” என்றார்.
ஏற்கனவே தங்கலான் படத்தின் டீசர் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ள நிலையில், தற்போது விக்ரமின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது: நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்!
அனுமதியின்றி கொடி ஏற்ற முயன்ற பாஜகவினர் கைது!
how much is amoxicillin prescription: amoxicillin capsule 500mg price – Amoxil Pharm Store