காசி படத்தில் நடித்த பிறகு, ஓரிரு மாதங்கள் தனக்கு பார்வையில்லாமல் போய் விட்டதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் படம் வெளியானது. படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லையென்றாலும், விக்ரம் உள்ளிட்டோர் உயிரை கொடுத்து மாறுபட்ட வேடத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.
இந்த நிலையில், படத்துக்கு படம் வித்தியாசமான வேடத்தில் நடிக்க முயற்சிக்கும் நடிகர் விக்ரம், பிங்க்வில்லா தளத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது, அவர் கூறியிருப்பதாவது, படத்துக்கு படம் வித்தியாசமாக நடிப்பதையே நான் விரும்புகிறேன். இதுதான் எனது ஃபேஷன். நான் சிகரெட் குடிப்பதில்லை. மது அருந்துவதில்லை. ஒவ்வொரு படத்திலும் ரிஸ்க் எடுத்து நடிக்கவே விரும்புகிறேன். காசி படத்தின் போது, கண் தெரியாதவகையில் நடித்திருந்தேன். இதற்காக, கண்ணை ஒரு மாதிரியாக வைத்திருந்தேன்.
இதன் காரணமாக, படப்பிடிப்பு முடிந்த பிறகும் ஓரிரு மாதங்கள் எனக்கு முழுமையான பார்வை கிடைக்கவில்லை. அந்த படத்துக்காக எனது எடையை 86 கிலோவில் இருந்து 50 கிலோவுக்கு கொண்டு வந்திருந்தேன். 50 கிலோவுக்கும் கீழே எடையை குறைக்க முயன்ற போது, எனது டாக்டர் என்னை எச்சரித்தார். இப்படி, செய்தால் உடலிலுள்ள உள் பாகங்கள் செயல் இழக்கும் அபாயம் இருக்கிறது என்று எச்சரித்ததால் நான் எடை குறைப்பை நிறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
வினயன் இயக்கத்தில் காசி திரைப்படம், 2001 ஆம் ஆண்டு வெளிவந்தது. காசி என்ற கண் தெரியாத கதாநாயகனாக விக்ரம் நடித்திருப்பார். அவரது மனைவி லட்சுமியாக காவ்யா மாதவன் நடித்துள்ளார். இந்த படம் நடிகர் விக்ரமுக்கு மிகுந்த நல்ல பெயரை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
எதிர் அணி வீரரை கடித்து வைத்த உருகுவே சவுரஸ்… கால்பந்து விளையாட்டுக்கு முழுக்கு!
குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்