“ரெய்டு” ட்ரெய்லர்: தீபாவளி ரேஸில் விக்ரம் பிரபு

சினிமா

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள “ரெய்டு” படமும் தீபாவளி ரேஸில் இணைய போகிறது என்ற தகவல் சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ரெய்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு அந்த தகவலை உறுதி செய்துள்ளது படக் குழு.

ஜெயிலர் படத்தில் கேமியோ பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கன்னட நடிகர் சிவராஜ் குமார். இவரது நடிப்பில் 2018 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த “Tagaru” படத்தின் தமிழ் ரீமேக் தான் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள “ரெய்டு”.

காக்கி சட்டை, வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஸ்ரீதிவ்யா ரெய்டு படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தர் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கொம்பன், விருமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா ரெய்டு படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் கார்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அதிரடியான பல ஆக்ஷன் காட்சிகளோடு ஒரு பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக ரெய்டு படம் இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்க்கும் போதே உறுதியாகிவிட்டது. நவம்பர் 10 ஆம் தேதி ரெய்டு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூர்யா படத்தை இயக்கும் அயலான் இயக்குனர்!

நியாயமில்லாமல் ஓட்டுநர் உரிமம் ரத்து: டிடிஎஃப் வாசன் காட்டம்!

 

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *