விக்ரம் வெற்றி : கமல் போட்ட ப்ளான்!

சினிமா

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வரும் நவம்பர் 7ஆம் தேதி விக்ரம் படம் வெற்றி விழா நடத்தப்படவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் விக்ரம். கமல்ஹாசன் நாயகனாக நடித்து அவரது தயாரிப்பில் இந்த வருடம் மார்ச் மாதம் 3 அன்று வெளியானது. இந்தப் படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

vikram movie success kamalhassan birthday plan

விக்ரம் படம் இதுவரை எந்தவொரு நேரடி தமிழ் படமும் செய்யாத வசூல் சாதனையை நிகழ்த்தியது. சுமார் ரூ.480 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்ததோடு, தமிழக திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடியது.

கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 100 நாட்கள் ஓடுவது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே இருந்து வந்தது

இந்நிலையில், இந்த வருடம் வெளியான படங்களில் விக்ரம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விக்ரம் படத்தின் 100ஆவது நாள் வெற்றி விழாவை நடத்த ராஜ்கமல் பிலிம்ஸ் முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

vikram movie success kamalhassan birthday plan

அதன்படி, கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி விக்ரம் 100வது நாள் வெற்றிவிழா கொண்டாடப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில், விக்ரம் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளனர்.

இந்த விழாவில் அரசியல், சினிமா சார்ந்த பிரபலங்கள் யார் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்கிற விபரங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவிக்கவில்லை.

இராமானுஜம்

ட்விட்டர் நிறுவன தலைகளுக்கு ஆப்பு: அதிரடியில் இறங்கிய எலான் மஸ்க்

மாநில திட்டக்குழு கூட்டம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0