நடிகர் விக்ரமின் 61ஆவது படத்தின் கதாநாயகி குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ படங்களை அடுத்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 61ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்தான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் பூஜை கடந்த ஜூலை 17ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த படம் கேஜிஎஃப் கதைக்களத்தை கொண்டு 19ம் நூற்றாண்டின் பின்னணியை கொண்ட கதைக்களமாக இருக்கும் என ரஞ்சித் தெரிவித்தார்.
ஸ்டுடியோ க்ரீன்ஸ் படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கதை திரைக்கதையை எழுத்தாளர் தமிழ்ப்பிரபா எழுதுகிறார். படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்தது. மேலும், கதாநாயகியாக நடிக்க நடுத்தர வயதுடைய பெண்ணை தேடுவதாக சொன்ன நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தானா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் அறிமுகமானார் ராஷ்மிகா. தற்போது விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பது உறுதியானால் ராஷ்மிகா தமிழில் நேரடியாக நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிரா