கோப்ரா பட நேரம் குறைக்கப்படுகிறதா?

சினிமா

எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ நேற்று (ஆகஸ்ட் 31) காலை உலகம் முழுவதும் வெளியானது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான  கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருளானி ரவி, மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார், இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லலித்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகப்படியான திரைகளில் வெளியான இப்படம் எப்படியிருக்கிறது, வசூல் நிலவரம் என்ன என்கிற கேள்விகள் படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனே எழும்.

ஆனால் கோப்ரா படத்தை பொறுத்தவரை ஹாலிவுட் தரம் எனக் கூறிக்கொண்டு 3 மணிநேரம் ஓடக்கூடிய படம் எடுத்திருக்கிறார்கள்.

பாம்பு வகைகளில் கோப்ரா(ராஜநாகம்) நீளமானது அதனால் கோப்ரா படத்தையும் நீளமாக எடுத்து விட்டாரோ என புறநகர் பகுதி தியேட்டர் ஒன்றில் படம் முடிந்தபின் தேநீர்கடையில் கூடும் கூட்டத்தில் கேட்க முடிகிறது.

அந்தளவுக்கு நுட்பமாக சினிமா ரசிகன் படத்தை பார்ப்பதை உணரமுடிகிறது. படத்தின் நீளத்தை 3 மணிநேரம் 3 நிமிடம், 3 நொடி என என்ன நோக்கத்திற்காக வைத்தார் என தெரியாது.

ஆனால் 30 நிமிட படத்தை குறைத்தால் படம் விறுவிறுப்பாக இருப்பதுடன், படம் பார்ப்பவர்கள் சோர்வடைந்து தூங்காமல் படம் பார்ப்பார்கள்.

கரண்ட் பில், புராஜக்டரில் படம் பார்க்க பயன்படுத்தப்படும் பல்பு எரியும் நேரம் குறையும் என்கிற விமர்சனங்கள் தியேட்டரில் படத்தை ஓட்டும் ஆப்பரேட்டர்களிடமிருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் படக்குழு படத்தின் நீளத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 30 நிமிட காட்சிகள் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அப்படி குறைக்கப்பட்டால் கோப்ரா படம் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகளில் தினசரி 2 மணிநேரம் மின்சார செலவு, புராஜக்டரில் பயன்படுத்தப்படும் பல்பு எரியும் நேரம் குறைவதன் மூலம்,

தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரூபாய் விரயம் தடுக்கப்படும் என்கின்றனர் தியேட்டர்கள் வட்டாரத்தில்.

இராமானுஜம்

‘கோப்ரா படம் பார்க்க போலாம் வாங்க’ : முதல்வரை அழைத்த கல்லூரி மாணவர்கள்!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.