விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட் பிளிக்ஸ் நிறுவனம் இன்று (அக்டோபர் 1) அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, லைலா, மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘தி கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். முதல் நாளில் உலகமெங்கும் இப்படம் 126 கோடி ரூபாய் வசூலை எட்டியது.
பின்னர் 13 நாட்களில் 413 கோடி ரூபாய் வசூல் செய்ததாக என ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்தது.
அதன் பிறகு வசூல் நிலவரம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், படத்தின் பாடல் வீடியோக்கள் அடுத்தடுத்து யூடியூபில் வெளியானது. தொடர்ந்து படம் எப்போது ஓடிடியில் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தி கோட் திரைப்படம் தியேட்டர்களில் வெளியான 28 நாட்களுக்கு பிறகு வரும் 3ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்திய என 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இதற்கிடையே படத்தின் நீளம் கருதி தியேட்டர் பிரிண்டில் நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் ஓடிடியில் இணைக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது என்ற தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
3000 ரன்கள் 300 விக்கெட்டுகள் : ஜடேஜா சரியான ஆல்ரவுண்டர்பா!