‘தளபதி 69’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் டிவிவி என்பது உறுதியான சூழ்நிலையில், இயக்குநர் மட்டும் இழுபறியாகவே இருந்து வந்தது. தற்போது அதற்கும் விஜய் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறாராம்.
இதுநாள்வரை ஏப்ரல் கடைசியில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், இயக்குநர் யாரென்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் எனவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் விஜயின் கடைசி படத்தை இயக்கும் அதிர்ஷ்டம் பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு கிடைக்கலாம் என தெரிகிறது.
‘முதல்வன்’ படத்தில் இணைய முடியாமல் போனதால் ‘நண்பன்’ படத்தில் விஜய்-ஷங்கர் கைகோர்த்தனர். அது விஜய்க்கு நல்ல கம்பேக் படமாகவும் அமைந்தது. இந்தநிலையில் மீண்டும் இருவரும் இணைய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றதாம்.
ஷங்கரை பொறுத்தவரை ‘கேம் சேஞ்சர்’, ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ ஆகிய படங்கள் முடியும் தருவாயில் உள்ளது. அதோடு அரசியல்ரீதியான படங்களை இயக்குவதிலும், ஹீரோவுக்கு மாஸான காட்சிகள் அமைப்பதிலும் அவர் கைதேர்ந்தவர்.
இதனால் விஜய்க்கு நெருக்கமானவர்கள் பலரும் கடைசி படத்தை அவர் இயக்கினால் நல்ல சாய்ஸ் ஆக இருக்கும் என ஆலோசனை கூறி வருகிறார்களாம். முன்னதாக திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் விஜயின் கடைசி படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.
ஆனால் அவர் இயக்கி சமீபத்தில் வெளியான ‘குண்டூர் காரம்’ பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக கைகொடுக்கவில்லையாம். தமிழை பொறுத்தவரை அட்லி, நெல்சன், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் என அனைவருமே தங்களது அடுத்த படங்களில் பயங்கர பிஸியாக உள்ளனர்.
இதனால் ‘தளபதி 69’ படத்தில் விஜய்-ஷங்கர் இணைவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது. என்றாலும் வழக்கம்போல நாம் இயக்குநர் யாரென்பதை காத்திருந்தே பார்க்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேட்டையன், விடாமுயற்சி, GOAT, கங்குவா படங்களின் ரிலீஸ் எப்போது?
குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகும் பிரபல செஃப்!