`தளபதி 67′ திரைப்படத்தின் படபூஜை இன்று (டிசம்பர் 5 ) சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். ஆக்ஷன் நிறைந்த மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் நடிப்பார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.
வாரிசு படத்துக்கு பிறகு விஜய்யின் 67-வது படம் இது என்பதால், தளபதி 67 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் தளபதி 67 படத்தின் பூஜை இன்று (நவம்பர் 5 ) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த பூஜையில், செல்போன்கள் அனுமதிக்கப்படவில்லை. தளபதி 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் லேப்பில் இரண்டு செட் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்று ரெட் டோனில் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை!
தோல்விக்கு இதுதான் காரணம்: ரோகித் சர்மா