நான்கு நாட்களில் ரூ.400 கோடி… பாக்ஸ் ஆபிஸில் ‘லியோ’ சாதனை!

Published On:

| By christopher

vijay's leo registered 400cr box office collection

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. முதல் பாதி விறுவிறுபாக சென்ற நிலையில், இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்பட்டதால் முதல் காட்சியிலிருந்தே படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.

எனினும் விஜய்யின் அபார நடிப்பு, LCU கனெக்சன், செம மாஸான ஆக்சன் காட்சிகள் போன்றவை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முதல் நாளே லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

படத்திற்கு எதிராக சமூகவலைதளங்களில் விமர்சனங்களும், ஏகப்பட்ட மீம்களும் பரவத் தொடங்கியதால் இரண்டாம் நாள் படம் சற்று சரிவை சந்திக்க, படம் 80 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது.

இதனால் நடிகர் விஜய்யின் லியோ படத்தின் வசூல் குறைந்துவிட்டது என அனைவரும் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில், அடுத்தடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் தியேட்டருக்கு படையெடுத்த ஃபேமிலி ஆடியன்ஸின் வருகையால் லியோ மீண்டும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் லியோ படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே உலகளவில் 404 கோடி ரூபாய் வசூல் செய்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

உலகளவில் மிகவும் நம்பகமான பாக்ஸ் ஆபிஸ் கண்காணிப்பு ஆதாரமான காம்ஸ்கோரில் இடம்பெற்ற முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்றுள்ளது.

அதில் கடந்த வாரம் உலகளவில் வெளியான கில்லர்ஸ் ஆப் தி ஃபிளவர் மூன் மற்றும் மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் எராஸ் டூர் போன்ற ஹாலிவுட்  படங்களுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பெற்றுள்ளது லியோ.

இதனை அமெரிக்காவில் லியோ படத்தை வெளியிட்ட பிரதியங்கிரா சினிமாஸும் உறுதி செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழ்நாட்டில் மட்டுமே 105 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

கேரளாவில் இதுவரை 33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள லியோ, தெலுங்கில் மூன்று நாட்களில் 32 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற உலக நாடுகளிலும் லியோ படத்தின் வசூல் பல சாதனைகளை படைத்துள்ளது.

மேலும் இன்று ஆயுத பூஜை, நாளை சரஸ்வதி பூஜை விடுமுறை என்பதால் லியோ படம் நிச்சயம் விரைவில் உலகளவில் 600 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்திற்கு முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், படத்தின் தரமும், ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் விஜய்க்கு இருக்கும் ஆதரவும் உலக அரங்கில் லியோ படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றியுள்ளது.

கூடிய விரைவில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் லைஃப் டைம் வசூலை நடிகர் விஜய்யின் லியோ படம் முறியடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் ராஜா

பாஜகவில் இருந்து விலகிய கவுதமி: சந்தேகம் எழுப்பும் வானதி சீனிவாசன்

கவுதமி விலகல்… தேர்தலில் வாய்ப்பளிக்காதது காரணமா?: எல்.முருகன் விளக்கம்!

Asian Para Games: பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு… முதல்வர் பாராட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share