தளபதி விஜயின் ‘GOAT’ மற்றும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ ஆகிய படங்களை, முன்னணி ஓடிடி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இரண்டு விஜயில் ஒருவர் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
விஜயின் 5௦-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற ஜூன் 13-ம் தேதி படத்தினை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். ஒருவேளை ஜூனில் படம் வெளியாகவில்லை எனில் தீபாவளி தினத்தில் திரைக்கு வரலாம்.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் தற்போது ‘GOAT’ படத்தின் ஓடிடி உரிமையை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். அதிகபட்ச விலையை கொடுத்து இப்படத்தின் உரிமையை அந்நிறுவனம் வாங்கியிருக்கிறதாம்.
இதேபோல அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தின் உரிமையையும் இந்நிறுவனமே கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால் தற்போது 2-வது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
அநேகமாக வருகின்ற சுதந்திர தினத்தில் இப்படம் வெளியாகும் என்றும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…