விஜயின் G.O.A.T squad வெளிக்காட்டிய வெங்கட்பிரபு

Published On:

| By christopher

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்திற்கு “THE GREATEST OF ALL TIME” (G.O.A.T) என டைட்டில்  வைக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் தனது 25வது படமாக இதனை தயாரித்து வருகிறது.

விஜய்யுடன் இணைந்து நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, நடிகர் அஜ்மல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் வெங்கட் பிரபுவின் பாய்ஸ் கேங்கும் இந்த படத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் இரண்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் GOAT படத்தின் ஓர் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Image

இந்த போஸ்டரில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் கையில் துப்பாக்கியுடன் போர் களத்தில் சிரித்து பேசிக் கொண்டு நடந்து வருவது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

பொங்கல் வாழ்த்து: தமிழில் தெரிவித்த மோடி

பொங்கல் திருநாளை குடும்பமாக கொண்டாடும் கோலிவுட் பிரபலங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment