நடிகர் விஜய்யின் ப்ரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் சித்திக் திடீர் உடல்நலைக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்.
மலையாள திரையுலகில் நகைச்சுவை திரைப்படங்களுக்கு பெயர் போன பிரபல இயக்குநர் சித்திக் (வயது 60). இவர் 1989ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் லாலுடன் சேர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நகைச்சுவை காட்சிகளை எழுதி இயக்கியுள்ளார்.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘ஃப்ரெண்ட்ஸ்’, காவலன், விஜயகாந்தின் எங்கள் அண்ணா, அரவிந்த் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல்வேறு நகைச்சுவை படங்களை இயக்கியுள்ளார்.
மலையாள திரையுலகில் முக்கிய இயக்குநராக வலம் வரும் சித்திக், கடைசியாக, கடந்த 2020 ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளிவந்த பிக் பிரதர் பட்த்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார் சித்திக். இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவர் விரைந்து குணமடைய வேண்டி பதிவிட்டு வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
கொலை செய்ய முயன்ற தந்தை: புத்திசாலித்தனமாக உயிர் பிழைத்த சிறுமி!
நம்பிக்கையில்லா தீர்மானம்: மோடிக்கு காங்கிரஸ் மூன்று கேள்விகள்!