தளபதி விஜயின் 69-வது படத்தை இயக்கும் போட்டியில் இருந்து ஹெச்.வினோத், கார்த்திக் சுப்புராஜ் விலகி விட்டனர். மீண்டும் வெற்றிமாறன் பெயர் அடிபட ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் விஜய் இப்படத்திற்காக வாங்கக்கூடிய சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இப்படத்தில் அவர் ரூபாய் 2௦௦ கோடியை சம்பளமாக பெறவிருக்கிறாராம்.
விஜயை பொறுத்தவரை தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் விஜயின் படங்கள் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகின்றன. இதைத்தவிர்த்து சாட்டிலைட், ஓடிடி உரிமையும் நல்ல தொகைக்கு போகும்.
இந்த படத்தோடு விஜய் சினிமாவை விட்டு விலகுகிறார் என்பதால், படத்திற்கான எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் பச்சைக்கொடி காட்டி விட்டதாம். கடைசியாக ‘வாரிசு’ படத்திற்கு விஜய் ரூபாய் 120 கோடியும், ‘GOAT’ படத்திற்கு ரூபாய் 150 கோடியும் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் தான் விஜய் தன்னுடைய கடைசி படத்திற்கு, ரூபாய் 2௦௦ கோடியை சம்பளமாக நிர்ணயித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜகவில் குவிந்த 5 ஆயிரம் கோடி..ரகசிய தேர்தல் பத்திரங்கள்..செக் வைத்த உச்சநீதிமன்றம்!
கார்த்தியின் ‘தங்கையாக’ மாறிய பிரபல நடிகை!