வெளியான ‘விஜயானந்த்’ படத்தின் முதல் பாடல்!

சினிமா

கர்நாடகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்‘ எனும் படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கான வீடியோ அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்பட்டிருக்கிறது.

‘ட்ரங்க்’ எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘விஜயானந்த்’.

Vijayanand movie first song released

இதில் ‘ட்ரங்க்’ படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத்,

பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் தமிழ் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார்.

சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீஸர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘காளிதாசா சாகுந்தலா…’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Vijayanand movie first song released

இந்த வெளியீட்டு விழா பெங்களூரில் உள்ள பிரபலமான ஓரியன் மால் வணிக வளாகத்தில் நேற்று(நவம்பர் 8) நடைபெற்றது

இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” 1976 ஆம் ஆண்டில் ஒரே ஒரு வாகனத்துடன் சரக்கு போக்குவரத்து துறையில் இறங்கிய விஜய் சங்கேஸ்வர், இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் வி.ஆர்‌எல் எனும் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார்.

இவரது வெற்றிப் பயணத்தின் பின்னணியில் உள்ள அவரது கடுமையான  உழைப்பையும், அவர் சந்தித்த சவால்களையும் சுவாரசியமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறோம். அவரது மகனான டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வருடன், விஜய் சங்கேஸ்வரின் பயணம் எப்படி வெற்றிகரமாக அமைந்தது என்பதையும் விவரித்திருக்கிறோம்.

கன்னடத்தில் தயாராகி முதன்முதலாக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியாகும் முதல் சுயசரிதை திரைப்படம் என்ற கௌரவத்தையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘காளிதாசன் சாகுந்தலா..’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். ” என்றார்.

இராமானுஜம்

டிஎன்பிஎஸ்சி: குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *