நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(மே21) வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து விஜய் நடிக்கும் 68 வது படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. சமீப நாட்களாக அது தொடர்பான தகவல்களும் இணையத்தில் வெளியாகின.
இந்நிலையில், விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(மே21) வெளியாகி உள்ளது.
அதன்படி, நடிகர் விஜய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாகவும், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் , கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விஜய் உடன் கூட்டணி அமைப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்