தனி விமானத்தில் திரிஷாவுடன் சென்ற விஜய்… எங்கே தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆன்டணி தாட்டில் திருமணம் கோவாவில் நேற்று (டிசம்பர் 12 ) நடந்தது. இந்த திருமணம் காலையில் பிராமண முறைப்படி நடைபெற்றது.
பிராமணப் பெண்ணாக கீர்த்தி சுரஷும் பிராமண மாப்பிள்ளையாக ஆண்டனி தாட்டிலும் மாறியிருந்தனர். மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.
காலையில் நடந்த திருமணத்தின் போது, தமிழ் பிராமண மாப்பிள்ளையாக ஆண்டனி காணப்பட்டது போல, மாலையில் நடந்த திருமணத்தில் கீர்த்தி அக்மார்க் கிறிஸ்தவ பெண்ணாக மாறியிருந்தார். அப்போது , இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் வழியாக 15 வருட காதல், குடும்ப பந்தமாக மாறியுள்ளது.
திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
திருமணம் முடிந்ததும் இரவில் கேசினோ விருந்தும் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் விஜய் , திரிஷா ஆகியோர் பங்கேற்றனர்.
இதற்காக, நடிகை திரிஷாவுடன் தனி விமானத்தில் சென்னையில் இருந்து விஜய் கோவாவுக்கு புறப்பட்டு சென்றார். இவர்கள் இருவருடன் மேலும் 4 பேர் கோவாவுக்கு அந்த தனி விமானத்தில் சென்றனர்.
ஸ்பார்ஷனா ஏவியேஷன் நிறுவனம் விஜய்யின் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. தற்போது, இவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
திண்டுக்கல் தீ விபத்து… திக் திக் நிமிடங்களை சொல்லும் தீயணைப்பு வீரர்
டங்ஸ்டன் சுரங்கம்… ஒரு பிடி மண்ணைக் கூட தொட முடியாது… சீமான் ஆவேசம்!