12 வருஷம் 2 மாசம் 1 நாள்… அமரன் இயக்குநரை பாராட்டிய விஜய்
அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து விஜய் பாராட்டியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ராணுவ அதிகாரி மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது.
இதன்மூலம் முகுந்தின் தியாகத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார். படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது.
இந்த படத்தின் ஒரு காட்சியில் சாய்பல்லவியை(இந்து) தேடி சிவகார்த்திகேயன்(முகுந்த்) செல்வார். அப்போது சாய்பல்லவி, “11 மாசம், 17 திவசம், 4 மணி 12 நிமிடம் ஆச்சு… நீ என்னோட சம்சாரிச்சுனு” சிவகார்த்திகேயனை பார்த்து சொல்வார்.
இக்காட்சியின் பாணியிலேயே நடிகரும், தவெக தலைவருமான விஜய்யுடனான சந்திப்பை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.
விஜய் ‘அமரன்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார்.
இந்நிலையில் விஜய்யுடன் 12 வருடங்களுக்கு முன்பு எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த ராஜ்குமார் பெரியசாமி, ’லவ் யூ விஜய் சார்… நன்றி, நான் உங்களுக்காக தினமும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். நாம் அடுத்த புகைப்படம் எடுக்க 12 வருஷம் 2 மாசம் 1 நாள் 15 மணி நேரம் ஆகியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
களத்திலும் சரி… ஏலத்திலும் சரி.. சென்னை அணி தான் கெத்து : காரணம் என்ன?
கனமழை எதிரொலி : நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா?