பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக போட்டியாளர் ஒருவர் இன்று (ஜனவரி 9) வெளியேறி இருக்கிறார்.
விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ், மாயா, மணி சந்திரா, விஜய் வர்மா ஆகிய ஆறு பேரில் இருந்து ஒருவரை பிக்பாஸ் இந்த வாரம் நடுவில் வெளியேற்றுவார் என நாம் ஏற்கனவே சொல்லி இருந்தோம்.
அதன்படி இன்று விஜய் வர்மா வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த காட்சிகள் நாளைய (ஜனவரி 10) பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.
இரண்டாவது வாய்ப்பு கிடைத்தும் கூட அதை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள விஜய் வர்மா தவறி விட்டார். இதனால் ஆரம்பத்தில் மாஸாக இருந்த இவரின் எண்ட்ரி நாட்கள் செல்லச்செல்ல உப்பு சப்பில்லாமல் போய் விட்டது.
இதற்கிடையில் இந்த வாரமே மீண்டும் ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேறக்கூடும் எனவும் தெரிகிறது.
நம்முடைய கணிப்பின்படி அது மணி சந்திராவாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் மாயாவை வீட்டில் இருந்து பிக்பாஸ் எப்படியும் அனுப்ப மாட்டார்.
விஷ்ணு முதல் ஆளாக பைனலுக்கு சென்ற போட்டியாளர் என்பதால் அவரையும் அனுப்ப முடியாது. தினேஷ், அர்ச்சனாவை வெளியில் அனுப்பவும் வாய்ப்புகள் குறைவு.
எனவே மணி சந்திராவைத்தான் பிக்பாஸ் பலிகடா ஆக்கிட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனினும் நாம் வழக்கம்போல பொறுத்திருந்து பார்க்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”தேவாலயத்திற்குள் வரக்கூடாது”… தடுத்து நிறுத்திய இளைஞர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம்!
Video: முஹமது ஷமி, வைஷாலிக்கு ‘அர்ஜுனா விருது’ வழங்கி கவுரவம்!