விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.
இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இசையமைப்பாளர் தமன் இசையில் வெளியான வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பமாகத் திரையரங்கிற்கு ரசிகர்களை கவர்ந்தது வாரிசு படம்.
உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிஸிலும் சாதனை படைத்தது.
என்னதான் திரையரங்கிற்குச் சென்று முழு படத்தைப் பார்த்தாலும் ரசிகர்கள் அனைவரும் எப்போது படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் விஜய் நடித்த வாரிசு படம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது என்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது.
மோனிஷா
Data Story : ஈரோடு கிழக்கு – புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
ராகுகாலம் பார்த்த முதல்வர்: காதில் பூ வைத்திருந்த எம்.எல்.ஏக்கள்!