எலிமினேஷன்னா என்னா? ஜி.பி முத்து

சினிமா

அக்டோபர் 9 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆண் போட்டியாளர்கள் 9 பேர், பெண் போட்டியாளர்கள் 10 பேர் மற்றும் ஒரு திருநங்கை 1 என மொத்தம் 20 போட்டியாளர்களை களம் இறக்கி உள்ளது பிக் பாஸ் சீசன் 6.

முதல் இரண்டு நாட்களில் கலகலப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி தற்போது பல சுவாரஸ்யங்களுடன் அதன் வழக்கமான ஆர்வத்தை தூண்டி வருகிறது.

இதில் ஹைலைட், டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துதான். டிக் டாக் பிரபலமான இவர் சற்று சுவாரஸ்யத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்தி வருகிறார். இவரிடம் யாரெல்லாம் சண்டை போடுகிறார்களோ, அவர்களை தனது பாணியில் கலாய்த்து வருகிறார். ஆனால் தனலட்சுமி இடம்தான் மாட்டிக்கொண்டு முழித்து வந்தார்.

முன்னதாக இந்த வாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனனி கேப்டனாகவும், ஆயிஷா, ஜி.பி.முத்து, தனலட்சுமி ஆகியோர் பாத்திரம் கழுவும் டீமிலும் இடம் பெற்றுள்ளனர்.

முதல் வாரத்திலேயே ஜனனி, ஆயிஷா இருவரும் நாமினேஷன் ஆனதால் அவர்கள் வீட்டிற்கு வெளியில் உள்ள வாழைப்பழ தொட்டியில் தான் தூங்க வேண்டியுள்ளது.

vijay tv bigg boss tamil today promo

பின்னர் விளையாடிய ஆயிஷா , ஜி.பி.முத்து பிறருக்கு வேலை செய்து கொடுக்கிறார் என்பதை வைத்து அவரை நாமினேஷன் செய்தார்.

இதனால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஜி.பி.முத்து. பின்னர் ஜி.பி முத்துவுக்கும் தனலட்சுமிக்கும் வாக்குவாதம் ஏற்பட அவர் குறித்த விமர்சனங்களை அள்ளி விடுகிறார் தனலட்சுமி. இதனால் உடைந்து அழுகிறார் ஜி.பி.முத்து.

இந்நிலையில் , இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவின் படி அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்க, ”நான் அப்படித்தான் மற்றவர்களுக்கு வேலை செய்து கொடுப்பேன்” என்று பேசுகிறார் ஜி.பி.முத்து. ”பின்னர் நீங்கள் நாமினேஷன் ஆகியுள்ளீர்கள்” என ஆயிஷா கூற, ”அப்படினா என்ன” என்று ஜி.பி.முத்து பஞ்ச் டயலாக் அடித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பேருக்குதான் நம்பர் ஒன் டீம்: ரவி சாஸ்திரி

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.