புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று(டிசம்பர் 31) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகின்றார்.
ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
மங்காத்தா படத்தில் அஜித் நடித்ததை தொடர்ந்து பல ஆண்டுகளாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே வழக்கமான வெங்கட் பிரபுவின் ஸ்டைலில் இப்படம் உருவாகி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Are you ready for #Thalapathy68FirstLook ?@actorvijay Sir @vp_offl @thisisysr @aishkalpathi @Ags_production @TSeries @PharsFilm pic.twitter.com/4l3WiqIdqt
— Archana Kalpathi (@archanakalpathi) December 31, 2023
முன்னதாக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மறைவை அடுத்து தளபதி 68 அப்டேட் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஏற்கெனவே திட்டமிட்டபடி புத்தாண்டையொட்டி தற்போது அதிகாரப்பூர்வமாக தளபதி 68 டைட்டில் அப்டேட் வெளியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புத்தாண்டில் கனமழை? : தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்!
புத்தாண்டு கொண்டாட்டம்: மது விற்பனைக்கு நள்ளிரவு 1 மணி வரை அனுமதி!