தளபதி 67: விஜய்க்கு ஜோடி யார்?

சினிமா

லோகேஷ் கனகராஜ் அடுத்த இயக்கத்தில் நடிகர் விஜய்-க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்திற்கு பிறகு தளபதி 67 படத்தை லொகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தின் அறிவிப்போடு திரும்பி வருவேன் என்று சமூக வளைதளங்களிலிருந்து இடைவெளி எடுப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் சிலர் ‘தளபதி 67 அப்டேட் சொல்லிட்டு போங்க’ என்று லோகேஷிடம் கோரிக்கை வைத்தவர்களும் உண்டு.

தளபதி 67 அப்டேட்

அதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் விக்ரம் படத்தின் வெற்றி குறித்து விஜய் லோகேஷிடம் 2 மணி நேரம் பேசியதாகவும் கூறியுள்ளார்.

al;t="vijay 67 next update"

இது தொடர்பாக லோகேஷ் பகிர்ந்து கொண்டது, “விஜய் சார் எனக்கு போன் செய்து 2 மணி நேரம் பேசினார். அவருக்கு விக்ரம் படம் மிகவும் பிடித்திருந்தது. லோகேஷ் பிரபஞ்சத்திற்குள் நுழைய அவர் தயாரக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் புள்ளிகளை இணைக்க முயற்ச்சிக்கிறோம். தயாரிப்பு தரப்பில் இருந்து முறையான அறிவிப்பு வந்து பிறகு படம் குறித்த தகவலை உறுதிப்படுத்த நம்பிக்கையோடு இருப்போம் என்றும் கூறியுள்ளார்.

தளபதி 67 படத்தை கமல்ஹாசனின் RKFI தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்-க்கு ஜோடியாக திரிஷா

al;t="vijay 67 next update"

விஜய் பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா போன்ற இளைய நடிகைகளுடன் ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது விஜய்யின் அடுத்த படத்தில் திரிஷா ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை திரிஷா விஜய் உடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களுக்கு பிறகு 5 ஆவது முறையாக ஜோடியாக நடிக்க உள்ளதாகவும், 14 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் விஜய் மற்றும் திரிஷா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மோனிஷா

தொடர் சாதனைகளில் தெலுங்கு சினிமா!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *