விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு இன்று (பிப்ரவரி 6 ) அறிவித்துள்ளது.
இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த திரைப்படம் ‘வாரிசு‘. இந்த படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், பொங்கல் விருந்தாக ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது.
படம் வெளியானது முதலே, ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும்..
மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வந்தாலும் வாரிசு திரைப்படம் மூன்று வாரங்களை கடந்து பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில், இந்த படம் தற்போது 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ‘வாரிசு’ படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு- தேர்தல் ஆணையம்!
பள்ளி மாணவிகளை பணக்காரர்களுக்கு விருந்து படைத்த கொடூரம்: மூடி மறைப்பது யார்?