விஜய்-எஸ்.ஜே.சூர்யா: மீண்டும் மெர்சல் கூட்டணி!

சினிமா

நடிகர் விஜயின் வாரிசு படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ். ஜே. சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பு, யோகி பாபு ராஷ்மிகா மந்தானா என முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் பலர் இணைந்துள்ளனர். படத்தின் ஐந்தாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் நடக்க இருக்கிறது. 

தில்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தில் எஸ். ஜே. சூர்யா இணைந்துள்ளதாக  உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் சினிமா வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளன. ‘குஷி’ படம் மூலம் நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் முக்கிய வெற்றியை கொடுத்தவர் இயக்குநர் எஸ் ஜே சூர்யா.

இதுமட்டுமில்லாமல், நடிகராக ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களிலும் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் எஸ். ஜே. சூர்யா இணையும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் விஜய் ராஜேந்திரன் எனவும் இதில் அவர் ஒரு மென்பொருள் (ஆப்) உருவாக்கும் பொறியாளராக பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0