விஜய் சேதுபதி வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

சினிமா

உப்பெனா பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உப்பெனா தெலுங்கு திரைப்படம் வெளியானது. இந்த படத்தைத் தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியிருந்தார்.

இந்த படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் விஜய் சேதுபதி வாங்கியதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தேனியைச் சேர்ந்த உதவி இயக்குநர் டல்ஹவுசி பிரபு உலக மகன் என்ற தனது கதையைத் திருடி உப்பெனா படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த படத்தின் மூலம் ஈட்டிய வருமானத்தில் 50 சதவீதத்தை எனக்கு அளிக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (டிசம்பர் 19) உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது, ”உப்பெனா திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நான் வாங்கவில்லை.

அந்த படத்தை நான் வாங்கியதற்கான எந்த ஆதாரத்தையும் மனு தாரர் சமர்ப்பிக்கவில்லை.

மேலும் எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை” விஜய் சேதுபதி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த விளக்கத்தைக் கேட்ட நீதிபதி விஜய் சேதுபதி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மோனிஷா

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்: கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த நிறுவனங்கள்!

குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்தார் சுந்தர் பிச்சை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.