மாவீரன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் குரல் இடம்பெற்றுள்ளது.
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் அவருடன் இணைந்து அதிதி, சரிதா, மிஷ்கின் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் ஜூலை 14 ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. மேலும், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இன்று மாலை படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி , தற்போது படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பில் நடிகர் விஜய் சேதுபதியின் குரல் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜூலை 2 ஆம் தேதி வெளியான மாவீரன் படத்தின் ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் அடிக்கடி மேல்நோக்கி பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், தற்போது மேலிருந்து விஜய் சேதுபதி பேசுவதாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் விஜய் சேதுபதியை குறிப்பிட்டு “மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.
My dear brother @VijaySethuOffl thank you for your kind gesture 🤗
மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️🤗🤗
– Sivakarthikeyan#Maaveeran#VeerameJeyam #MaaveeranFromJuly14th pic.twitter.com/Nobb7HOIhC— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 11, 2023
இதை தற்போது விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஒரு பாட்டில் தண்ணீர் 350 ரூபாய்: வாடிக்கையாளர் அதிருப்தி!
”7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்தால் புரட்சி வெடிக்கும்”- கிருஷ்ணசாமி